Hunger Games 1

Hunger Game catching Fire (2013)



Image credit: Lion gates movies


எதிர்கால உலகம் எப்படி மாறும் என யோசித்ததன் விளைவே இப்படத்தின் கதை. அதாவது வடஅமெரிக்கா ஒரு காலகட்டத்தில் உள்நாட்டுக்கலவரங்களால் பிரிவினை ஏற்பட்டு பல பாகங்களாகப் பிரிகிறது. அப்படி பிரியும்போது பிறக்கும் ‘பனெம்’ என்ற நாடு 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ‘டிஸ்ட்ரிக்ட் 1’ முதல் ‘டிஸ்ட்ரிக்ட் 12’ வரை பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்த 12 டிஸ்ட்ரிக்ட்டுகளிலிருந்தும் தலா 2 பேரை (ஒரு ஆண், ஒரு பெண்) தேர்வு செய்து, அந்த 24 பேரையும் ஒரு காட்டுக்குள் இறக்கிவிட்டு விடுவார்கள். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடுத்தவரை கொலை செய்ய வேண்டும். முடிவில் உயிரோடு வெளியே வரும் அந்த ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இப்படி விளையாடப்படும் இந்த ஆபத்தான விளையாட்டை ‘தி ஹங்கர் கேம்ஸ்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இந்த ‘ஹங்கர் கேம்ஸ்’ விளையாட்டை ஒரு ரியாலிட்டி ஷோ போல பெரும் பணத்தை முதலீடு செய்து, அதை ‘லைவ்’வாக ஒளிபரப்பவும் செய்வார்கள். தவிர, போட்டியாளர்களைத் தயார்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், சண்டையின்போது அவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், முதலுதவிகள் என அனைத்தையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைத்துவிடுவார்கள்.

இந்த ‘ஹங்கர் கேம்ஸ்’ ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடக்கிறது. அப்படி 74ம் ஆண்டு நடைபெறும் ஹங்கர் கேம்ஸில் பங்குகொண்டு கட்னிஸ் எவர்டீனும் ஜெனிபர் லாரன்ஸ், பீட்டா பெல்லர்க்கும் ஜோஷ் ஹட்சர்சன் ஜெயிப்பதோடு நிறைவடைகிறது  ‘தி ஹங்கர் கேம்ஸ்’ திரைப்படம்.

Hunger Games ஆட்டத்துக்கு முன் அதற்கு தரும் டிரைனிங், அதில் அசத்தும் கேட்னிஸ், அங்கு வரும் குடிகார டிரைனர் என பல விஷயங்கள் நம்மை ஈர்க்கிறது.

போர், கொலைகள், விளையாட்டு என்று போனாலும் அதன் அடிநாதமாய் அன்பும், சக மனிதனை நேசிப்பதையும் அழுத்தமாக சொல்வதற்கு Hunger Games டீமுக்கு ஒரு சல்யூட் !

முதல் மூன்றே தினங்களில் 155 மில்லியன் டாலர்களை வசூலித்தது. ரூபாயில் ஏறக்குறைய 900 கோடிகள்.


Comments

Popular posts from this blog

Small soldiers Tamil review