The Huntsman winter war Tamil review
தி ஹண்ட்ஸ்மேன் வின்டர் வார்
Image credit: Disney
உலகம் மொத்தத்தையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரத் துடிக்கும் தீய எண்ணம் கொண்ட ராணி ரவென்னா..
அவளது தங்கை ஃப்ரேயா..
ஃப்ரேயா ஆன்ட்ரூ என்பவனைக் காதலிக்கிறாள்..இதனால் பெண் சிசு ஒன்றை ஈன்றெடுக்கிறாள்.இதனால் சினம் கொண்ட ரவென்னா சூழ்ச்சியால் அந்த சிசுவைக் கொன்று பழியை ஆன்ட்ரூவின் மேல் சுமத்துகிறாள்.
தன் காதலை பொய்யாக்கியதாய் கருதும் ஃப்ரேயா வெறி கொண்டு தன்னுள் புதைந்து கிடக்கும் சக்தியை வெளிப்படுத்துகிறாள்.உறைபனியைக் கொண்டு ஆன்ட்ரூவைக் கொல்கிறாள்.
அதன் பிறகு பனி ராணியாக உருவெடுக்கும் அவள்..ஒவ்வொரு நகரமாக படை கொண்டு வீழ்த்தி அங்கிருக்கும் குழந்தைகளை தனது பயிற்சிப் படையில் சேர்த்து மிகச் சிறந்த வீரர்களாக்குகிறாள்.
அன்பு பாசம் காதல் என்ற வார்த்தைகளே கேட்டாலே வெறுப்பாகிப் போகும் பனி ராணியின் சிறந்த வீரர்களான எரிக்கும்,சாராவும் ஒருவரை ஒருவர் காதலிப்பது கண்டு வெம்புகிறாள்.
இருவரையும் பிரிக்கிறாள் சூழ்ச்சி கொண்டுஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது ரவென்னாவின் மரணத்திற்குப் பிறகு..மாய சக்திகளை தன்னுள் கொண்டிருக்கும் மந்திர கண்ணாடியை கைப்பற்ற நினைக்கிறாள் பனி ராணி!அதற்கு முன்னதாக எரிக்கும் சாராவும் மீண்டும் சந்திக்கிறார்கள்.தனது குள்ள நண்பர்களின் உதவி கொண்டு அந்த மந்திரக் கண்ணாடியை அடையும் போது பனி ராணியால் கைது செய்யப்படுகிறார்கள்.மந்திரக் கண்ணாடியிலிருந்து ரவென்னா வெளிப்படுகிறாள்.மொத்த சாம்ராஜ்யமும் தனதுதான் என்று சொல்லும் ரவென்னாதான் ஆன்ட்ரூவையும்,தனது குழந்தையையும் கொன்றவள் என்றறிந்து ரவென்னாவை கொல்ல முற்படும் போது ரவென்னாவால் கொல்லப்படுகிறாள் பனி ராணி!
அதன் பிறகு எரிக்கும்,சாராவும் என்னவானார்கள்.?ரவென்னா என்னவானாள்.?பனி சாம்ராஜ்யம் என்னவானது என்பது திரையில் காண்கிறோம்.
Comments
Post a Comment